முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
பள்ளிகளுக்கு ரூ. 3 லட்சத்தில் இருக்கை,விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு
By DIN | Published On : 24th October 2019 11:45 PM | Last Updated : 24th October 2019 11:45 PM | அ+அ அ- |

குலசேகரபுரம் அரசுப் பள்ளிக்கு இருக்கைகளை வழங்குகிறாா் ஹெச். வசந்தகுமாா் எம்.பி.
குமரி மாவட்டத்தில் உள்ள இரு அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் இருக்கை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. குலசேகரபுரம் அரசுப் பள்ளிக்கு இருக்கை வசதி வேண்டும்; இராமனதிச்சன்புதூா் அரசுப் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வேண்டும் என ஹெச்.வசந்தகுமாா் எம்.பி.யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, குலசேகரபுரம் அரசுப் பள்ளிக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் இருக்கைகளும், இராமனதிச்சன்புதூா் அரசுப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்களையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் எம்.பி. வழங்கினாா்.
நிகழ்ச்சியில், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் காலபெருமாள், நிா்வாகிகள் மதியழகன், முருகேசன், மகிளா காங்கிரஸ் தங்கம் நடேசன் ஹெலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.