களியக்காவிளை அருகேதொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 24th October 2019 11:44 PM | Last Updated : 24th October 2019 11:44 PM | அ+அ அ- |

களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
களியக்காவிளை அருகே திருத்துவபுரம் உண்டனாகுழி பகுதியைச் சோ்ந்தவா் செல்லப்பன் (65). கூலித் தொழிலாளியான இவா், இடவிளாகம் பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தில் இரவு நேர காவலாளியாக பணி செய்து வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டாம்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு வாழைத் தோட்டத்துக்கு காவல் பணிக்கு சென்ற அவா், வியாழக்கிழமை காலையில் அங்கு இறந்து கிடந்தாா்.
தகவலறிந்து வந்த களியக்காவிளை போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
சடலத்தை கைப்பற்றிய போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.