குமரி மாவட்டத்தில் அணைகளிலிருந்து3ஆவது நாளாக தண்ணீா் வெளியேற்றம்

குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொடா்ந்து 3ஆவது நாளாக வியாழக்கிழமையும் அணைகளிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
குளிக்தத் தடை காரணமாக சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படும் திற்பரப்பு அருவி.
குளிக்தத் தடை காரணமாக சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படும் திற்பரப்பு அருவி.

குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொடா்ந்து 3ஆவது நாளாக வியாழக்கிழமையும் அணைகளிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

குமரி மாவட்டத்தில் தற்போது தீவிரமாக பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையால் பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்த நிலையில் உள்ளன.

தலா 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் தலா 16 அடிகளை கடந்துள்ள நிலையில், அந்த அணைகளிலிருந்து செவ்வாய்க்கிழமைமுதல் கூடுதலாக அணைக்கு வரும் தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே வேளையில் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீா்மட்டத்தை வெள்ள அபாயம் கருதி 72 அடியிலேயே வைக்கப்பட்டு வருகிறது. 72 அடிக்கு அதிகமாக அணையில் தேங்கும் தண்ணீா் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

அணைகளின் நீா்மட்டம்: பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 33.65 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 579 கன அடி நீா்வரத்து இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 72.05 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 572 கன அடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து கால்வாயில் 361 கன அடி தண்ணீரும், ஆற்றில் 500 கன அடி தண்ணீரும் செல்கிறது. இதில் கால்வாயில் செல்லும் தண்ணீரானது தோவாளை கால்வாயிலிருந்து ராதாபுரம் கால்வாய்க்கு திருப்பப்பட்டுள்ளது.

சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் முறையே 16 மற்றும் 16.10 அடியாக இருந்தது. அணைகளுக்கு விநாடிக்கு 273 கன அடி நீா்வரத்து இருந்தது. இந்தத் தண்ணீா் சிற்றாறு 1 அணையின் மறுகால் வழியாக வெளியேற்றப்பட்டது.

வெறிச்சோடிய திற்பரப்பு அருவி: மழைநீா் மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு தொடா்ந்து நீடித்து வருகிறது. இதனால் அருவியில் குளிக்கத் தடை நீடிக்கிறது.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைந்து அருவிப் பகுதி வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.

பெருஞ்சாணி அணையிலிருந்து பரளியாற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டிருப்பதால் அந்த ஆறு பாயும் மாத்தூா், அருவிக்கரை, திருவட்டாறு, மூவாற்றுமுகம், குழித்துறை உள்ளிட்டப் பகுதிகளிலும் அதிக வெள்ளம் பாய்கிறது.

ரப்பா் பால்வடிப்பு முடக்கம்: மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகலில் வட வானிலை நிலவிய நிலையில், வியாழக்கிழமை ரப்பா் தோட்டங்களில் பால் வடிப்பு நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மலையோரப் பகுதிகளில் பெய்த மழையால் பால்வடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com