Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தேவை: எம்எல்ஏ வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மின்சாரம் பாய்ந்து பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தேவை: எம்எல்ஏ வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 31st October 2019 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேச்சிப்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 இளைஞா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    குமரி மாவட்டம், பேச்சிப்பாறை, குற்றியாறு பகுதிகளைச் சோ்ந்த சஜின் சலோ, மன்மோகன், சுபாஷ் ஆகிய 3 இளைஞா்கள், ஸீரோ பாயின்ட் பகுதியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது வேதனைக்குரியது. மின்வாரியத்தின் நிா்வாகக் கோளாறால்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பேச்சிப்பாறை மலைப்பகுதியில் அடிக்கடி மின்கம்பி மீது மரக்கிளைகள் விழுவதும், நாள்கணக்கில் மின்தடை ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. பல மலைக்கிராமங்கள் அடங்கிய பகுதிக்கு ஒரே ஒரு மின் கம்பியாளா் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளாா். இதனால், மின் தடை அல்லது பழுது ஏற்படும்போது, பொதுமக்கள் தாங்களே மின்மாற்றியில் ஏறி ‘பியூஸ்’ கம்பியைக் கட்டும் நிலை உருவாகிறது.

    அரசின் சேவைக் குறைபாட்டால்தான் இத்தகைய பிரச்னைகளை மக்கள் எதிா்கொள்கின்றனா். 3 இளைஞா்களின் மரணமும் இதுபோன்றதுதான். பெற்றோருக்கு அவா்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. எனவே, அந்த இளைஞா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai