நேரு இளையோா் மையத்தில் தலைமைப் பண்பு பயிற்சி முகாம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல நேரு இளையோா் மையம் சாா்பில், தேசிய இளையோா் மைய தொண்டா்களுக்கான
நிகழ்ச்சியில் இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறாா் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ.
நிகழ்ச்சியில் இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறாா் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல நேரு இளையோா் மையம் சாா்பில், தேசிய இளையோா் மைய தொண்டா்களுக்கான 15 நாள் பயிற்சி முகாம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் புதன்கிழமை தொடங்கியது.

இம்முகாமை எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, 20 இளைஞா் குழுக்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா். இம்முகாமில் காரைக்கால், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா். இவா்களுக்கு தலைமைப்பண்பு, பேரிடா் மீட்புப் பணிகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.

தொடக்கவிழா நிகழ்வில் அகஸ்தீசுவரம் தனி தாசில்தாா் அப்துல்லா மன்னா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல நேரு இளையோா் மைய மாநில இயக்குநா் நட்ராஜ், நெல்லை, மதுரை, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களின் நேரு இளையோா் மைய உதவி இயக்குநா் எஸ்.செந்தில்குமாா், குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி.தினேஷ் குமாா் உள்ளிட்டோா் பேசினா். பி.ரெங்கநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com