ஆதிபராசக்தி பீடத்தில் ஓணம் பண்டிகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியிலுள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்ற ஓணம் சிறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கேரள பாரம்பரிய உடையில் பங்கேற்று அத்தப்பூ கோலமிட்டு வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு பல்வேறு வகையான பதார்த்தங்கள் படைக்கப்பட்டன. கோயிலில் பக்தர்களால் ரோஜா, அரளி, பிச்சி, உள்ளிட்ட பல்வேறு வகை பூக்களால் பெரிய அளவில் போடப்பட்டிருந்த அத்தப்பூ கோலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

புனித ஆரோக்கிய மாதா பள்ளியில்...
கன்னியாகுமரி மாவட்டம், முன்சிறை புனித  ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. 
இவ்விழாவுக்கு பள்ளியின் இயக்குநர் அருள்தந்தை சேவியர்புரூஸ் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் பிரபா, முதல்வர் தேவசகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாணவர், மாணவிகளுக்கு கோலப்போட்டி மற்றும் மலர் கண்காட்சி ஆகியவை நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளியின் துணைமுதல்வர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com