ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

கன்னியாகுமரி அருகே ரயில்வே அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ. 50 ஆயிரம்

கன்னியாகுமரி அருகே ரயில்வே அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ. 50 ஆயிரம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே பூங்குளத்துவிளையைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் (60). இவரது மகன் பெங்களூரில் 
ரயில்வேத்துறையில் உயரதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, ராஜபாண்டியன் சில நாள்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் சென்றிருந்தாராம். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவரது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணம் ஆகியவற்றை 
திருடிச் சென்றது குறித்து கன்னியாகுமரி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. திருட்டு நடைபெற்ற வீட்டுக்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்களும் சிதறிக் கிடந்தன. தகவலறிந்த ராஜபாண்டியன் புதன்கிழமை வீடு திரும்பினார்.
வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் 
பரிசு பொருள்கள் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. 
ராஜபாண்டியன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 5 சிசிடிவி கேமராக்களை மாற்றுத் திசையில் வைத்ததோடு, அதிலிருந்த ஹார்ட் டிஸ்க்கையும் திருடர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. கன்னியாகுமரி போலீஸார் வழக்குப் பதிந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com