கிழக்கு கடற்கரை வழியாக குமரி-சென்னைக்கு ரயில் பாதை: விஜயகுமார் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரையோரமாக ரயில்பாதை அமைக்க வேண்டும் என விஜயகுமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரையோரமாக ரயில்பாதை அமைக்க வேண்டும் என விஜயகுமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
தெற்கு ரயில்வே சார்பில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் அதன் பொதுமேலாளர் ராகுல்ஜெயின் தலைமையில் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய குமரி மாவட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் விஜயகுமார் எம்.பி. பொதுமேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில்,  "புதுகிராமம் கருப்புக்கோட்டை ரயில்வே கிராசிங்கில் இருந்து  ஊட்டுவாழ்மடம், கிழக்குப் பகுதி வழியாக நாகர்கோவில் ரயில் சந்திப்பு நிலையத்தின் தெற்கு பகுதியை அடையும் வகையில் இரட்டை ரயில்பாதை அமைக்க வேண்டும்;  நாகர்கோவில் சந்திப்பிலிருந்து ஊட்டுவாழ்மடம் சுரங்கப்பாதை முதல் வடிவீஸ்வரம் வழியாகவும்,  முத்து திரையரங்கு வரையும் தொடர்பு சாலைகள் அமைக்க வேண்டும்; குமரியிலிருந்து வேளாங்கண்ணிக்கு தினசரி ரயிலும், சென்னைக்கு தினமும் காலையில் புறப்படும் ரயிலும் இயக்க வேண்டும்; குமரி அதிவிரைவு ரயிலில் மகளிருக்கு தனி ரயில் பெட்டி ஒதுக்க வேண்டும்; நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்த கட்டணத்தை குறைக்க வேண்டும்; சண்டீகர்- திருவனந்தபுரம் வாரம் 2 முறை ரயிலை குமரி வரை நீட்டிக்க வேண்டும்; நாகர்கோவில் ரயில் நிலைய வளாகம் முழுவதிலும்  சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும்; திருச்சி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி ரயில் இரணியல் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்;  குமரி- சென்னைக்கு கிழக்கு கடற்கரையோரம் புதிய ரயில்பாதை அமைக்க தொலைநோக்கு திட்டம் உருவாக்கப்பட வேண்டும்' என வலியுறுத்தப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com