குளச்சலில் ஏ.ஐ.சி.சி.டி.யூ சத்தியாகிரக போராட்டம்
By DIN | Published On : 19th September 2019 07:50 AM | Last Updated : 19th September 2019 07:50 AM | அ+அ அ- |

கேரள பதிவு வாகனங்களை தடை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் குளச்சல் காமராஜர் பேருந்து நிலையம் அருகே சத்தியாகிரக போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில், "குளச்சல் பகுதியில் இயங்கும் கேரள பதிவு வாகனங்களை தடை செய்யவேண்டும்; இந்தி மொழி திணிப்பை மத்திய அரசு கைவிடவேண்டும்; 5, 8, ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும்; தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணியில் தமிழ்நாட்டினரை தேர்வு செய்யவேண்டும்; மேக்சி வேன்களுக்கு 21 இருக்கைகள் அமைத்திட அனுமதி வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்துக்கு, ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்டத் தலைவர் சுசிலா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அந்தோணிமுத்து , ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்டச் செயலர் திருமேனி ஆகியோர் விளக்கிப் பேசினர். இப்போராட்டத்தில் நகரத் தலைவர் ராஜகுமார், லிவின், ரத்தினராஜ், துணைச் செயலர்கள் மலிக்முகம்மது, ஆரோக்கிய மோகன்ராஜ், சீலன், மாவட்ட விவசாய சங்கச் செயலர் கணபதி மற்றும் கார்மல், ஜாண்சன் பால்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.