Enable Javscript for better performance
நவராத்திரி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த 2 யானைகள் கேரள வனத்துறையால் தடுத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    நவராத்திரி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த 2 யானைகள் கேரள வனத்துறையால் தடுத்து நிறுத்தம்

    By DIN  |   Published on : 25th September 2019 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலிருந்து கேரளம் செல்லும் நவராத்திரி ஊர்வலத்தில் பங்கேற்க கேரளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை குமரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட 2 யானைகளை அம்மாநில வனத்துறையினர் பாறசாலையில் தடுத்து நிறுத்தியது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    கம்பர் பூஜித்ததாக கருதப்படும் பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் வேளிமலை குமாரசுவாமி உள்ளிட்ட சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டத்திலிருந்து கேரளம் கொண்டு செல்லப்பட்டு, அங்கு நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்ற பின் குமரி மாவட்டத்துக்கு திரும்ப கொண்டு வரப்படும் வழக்கம் நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. 
    கேரள அரசு சார்பில் நடைபெறும் இவ்விழாவுக்காக, நிகழாண்டு சுவாமி விக்ரகங்கள் பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து வியாழக்கிழமை கேரள மாநில போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையுடன் கேரளத்துக்கு புறப்பட்டுச் செல்கிறது. இவ் விழாவில் பங்கேற்க கேரள தேவஸ்வம் போர்டுக்கு சொந்தமான 2 யானைகள் குமரி மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டன.  
    உரிய ஆவணங்களின்றி அண்டை மாநிலப் பகுதிக்கு கொண்டு செல்வதாக கூறி கேரள மாநில எல்லைப் பகுதியான பாறசாலையில் அம்மாநில வனத்துறை அதிகாரிகள் 2 யானைகளையும் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து இந்த யானைகள் பாறசாலை மகாதேவர் கோயில் வளாகத்தில் கட்டி போடப்பட்டுள்ளது.
    இதன் காரணமாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் நவராத்திரி ஊர்வலத்துக்கு தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
    இந்த நிலையில் நவராத்திரி ஊர்வலத்துக்கு செல்லும் யானைகளுக்கு கேரள வனத்துறையிலிருந்து உரிய அனுமதி பெறாமல் அலட்சியமாக செயல்படும் கேரள தேவஸ்வம் அதிகாரிகளை கண்டித்து நெய்யாற்றின்கரை தேவஸ்வம் அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai