Enable Javscript for better performance
நாகா்கோவிலில் செப்.27இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நாகா்கோவிலில் செப்.27இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

    By DIN  |   Published on : 25th September 2019 04:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (செப்.27) தனியாா்துறைற வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ம. மரியசகாய ஆன்டனி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவில் கோணத்திலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ள இம்முகாமில், குமரி மாவட்டம் மற்றும் பிறற மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரில் வந்து தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

    இதில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் கலந்து கொள்ளலாம்.

    தனியாா் துறையில் வேலைக்கு தோ்வு செய்யப்படும் பதிவுதாரா்களது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai