நாஞ்சில் கத்தோலிக்கப் பள்ளியில் இன்று புத்தக கண்காட்சி தொடக்கம்

வழுதலம் பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க பள்ளியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ( செப்.28, 29) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது


வழுதலம் பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க பள்ளியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ( செப்.28, 29) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. 
பள்ளித் தாளாளர் டைட்டஸ் மோகன் தலைமை  வகித்து,  புத்தகக் கண்காட்சியை தொடங்கிவைக்கிறர். மொழிப்போர் தியாகி  கொடிக்கால் சேக் அப்துல்லா தொடக்கவுரையாற்றுகிறார். எழுத்தாளர் குமரி ஆதவன் சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து, நடைபெறும் கவியரங்கில்  கவிஞர்கள்  நட.சிவகுமார்,  என்.டி.ராஜ்குமார், லியோன் சசி,  சஹானா,  ஆகியோர்    பங்கேற்கின்றனர்.  இரண்டாவது அமர்வில்  என்னை செதுக்கிய எழுத்துக்கள்  என்ற தலைப்பில் குறும்பனை பெர்லின் ,  களந்தை பீர்முகம்மது,  குமாரசெல்வா,  லட்சுமி மணிவண்ணன் ஆகியோர்  பேசுகின்றனர். நிறைவு விழாவிற்கு  குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் இயேசுரெத்தினம் தலைமை வகிக்கிறார்.  சிறப்பு விருந்தினர்களாக சாகித்ய  அகாதெமி  விருது பெற்ற எழுத்தாளர்கள்  பொன்னீலன், குளச்சல் மு.யூசுப்,  ஆகியோர்  உரையாற்றுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com