நாகர்கோவிலில் நூதனப் போராட்டம்: கம்யூனிஸ்ட் கட்சியினர் 18 பேர் கைது

நாகர்கோவிலில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 18 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். 


நாகர்கோவிலில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 18 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். 
நாகர்கோவில்  நகரில்  புதைச்சாக்கடைத் திட்டப்பணிகள், குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்காக  நகரில் பிரதான சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இதையடுத்து, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. 
கனரக வாகனங்கள் பள்ளங்களில் சிக்கிக் கொள்கின்றன. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், சாலைகளை உடனடியாக சீரமைக்கக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் மணியடிச்சான் கோயில் சந்திப்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் மாவட்டச் செயலர் இசக்கிமுத்து, நகரச்செயலர் ஸ்ரீகுமார், மாவட்டப் பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், நிர்வாகிகள் கங்கா, சிவகுமார், நரேந்திரகுமார், சுப்பிரமணியன், நயினார் உள்ளிட்ட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com