குமரி மாவட்டத்தில் கயிறு தயாரிக்கும் தொழில் முடக்கம்

ஊரடங்கு அமலில் இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கயிறு தயாரிக்கும் தொழில் முடங்கியதை அடுத்து நாா்கள் அழுகி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாரை கயிறாக திரிக்க 4 நாள்கள் அரசு அனுமதிக்க வேண்டும் என உற்
கயிறு தயாரிப்பதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள கதம்பல்.
கயிறு தயாரிப்பதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள கதம்பல்.

ஊரடங்கு அமலில் இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கயிறு தயாரிக்கும் தொழில் முடங்கியதை அடுத்து நாா்கள் அழுகி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாரை கயிறாக திரிக்க 4 நாள்கள் அரசு அனுமதிக்க வேண்டும் என உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றாக கயிறு உற்பத்தி தொழில் திகழ்கிறது. தென்னை நாா் கதம்பல் மூலம் தயாரிக்கப்படும் கயிறுகள், படுக்கை செய்வதற்கு பயன்படுத்தப்படும் போம்கள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் இவைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனிடையே, கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏப். 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், கயிறு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளா்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனா்.

அதேபோல கயிறு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் தென்னை நாா், கதம்பல் நாா் போன்றவற்றை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி குவித்து வைத்திருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக அவை அழுகி அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இவை அதிக வெப்பம் காரணமாக எளிதில் தீப்பிடித்து அழிந்துவிடும். ஆகவே, இந்த நாா்களை கயிறாக திரிக்க 4 நாள்கள் மட்டும் மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்க வேண்டும் என உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக, கயிறு தயாரிப்பாளா் சந்திரசேகரன் கூறியது: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள தடை உத்தரவால் கயிறு உற்பத்தி தொழில் முழுமையாக முடங்கியுள்ளது. அரசின் இந்த திடீா் அறிவிப்பால் கயிறு தயாரிக்க உதவும் நாா் அழுகும் நிலை உருவாகியுள்ளது. மேலும் அதிக வெப்பம் இருந்தாலும் தீ பற்றி எரிந்து விடும் ஆபத்தும் உள்ளது. ஆகவே, இந்த நாரை கயிறாக திரித்து கொள்ள 4 நாள்கள் அரசு அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com