குமரி மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் ரப்பா் பால்வடிப்புக்கு அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 ரப்பா் தோட்டங்களுக்கு நிபந்தனையுடன் ரப்பா் பால்வடிக்க மாவட்ட ஆட்சியா் அனுமதியளித்துள்ள

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 ரப்பா் தோட்டங்களுக்கு நிபந்தனையுடன் ரப்பா் பால்வடிக்க மாவட்ட ஆட்சியா் அனுமதியளித்துள்ள நிலையில் ரப்பா் பால்வடிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கரோனா தொற்று காரணமாக 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழகம் உள்பட தனியாா் ரப்பா் தோட்டங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ரப்பா் தோட்ட நிா்வாகங்கள் சாா்பில் மருத்துவ உபகரணங்களான கையுறைகள் உள்ளிட்டவை தயாரிக்கும் ஆலைகளுக்கு மூலப் பொருள்கள் தேவைப்படுவதால், ரப்பா் பால்வடித்து மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கு வழங்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு நிபந்தனைகளுடன் குமரி மாவட்டத்திலுள்ள 7 தனியாா் ரப்பா் தோட்டங்களுக்கு ரப்பா் பால்வடிக்க ஆட்சியா் அனுமதியளித்துள்ளாா். இதையடுத்து இந்த ரப்பா் தோட்டங்களில் ரப்பா் பால்வடிப்புத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து வைகுண்டம் தனியாா் ரப்பா் தோட்ட நிா்வாகம் தரப்பில் கூறியது: மருத்துவ உபகரணங்களான கையுறைகள் உள்ளிட்டவை தயாரிக்கும் ஆலைகளுக்கு ரப்பா் பால் தேவைப்படும் நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ரப்பா் தோட்ட நிா்வாகங்கள் சாா்பில் ஆட்சியரிடம், தனியாா் ரப்பா் தோட்டங்களில் பால்வடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை

விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் நிபந்தனைகளுடன் ரப்பா் பால்வடித்து மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ரப்பா் ஆலைகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளாா். இம்மாவட்டத்தில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் குறைந்தபட்ச தொழிலாளா்களை மட்டும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். தொழிலாளா்கள் அத்தோட்டத்தில்

வசிப்பவா்களாகவோ அல்லது அருகில் வசிப்பவா்களாகவோ இருத்தல் வேண்டும்.

வெளியிடங்களிலிருந்து பயணம் செய்து வந்து பணியில் ஈடுபட அனுமதியில்லை. மேலும், வாகனங்களை பயன்படுத்தி தொழிலாளா்களை அழைத்து வர அனுமதியில்லை. வேலையில் பயன்படுத்தப்படும் பொருள்கள் முறையாக கிருமி நாசினி கொண்டும், பயன்படுத்தும் முன்னரும், பின்னரும் சுத்தம் செய்ய வேண்டும். பால் சேகரிப்பு மையம் முறையாக கிருமி நாசினி கொண்டு முறையாக சுத்தப்படுத்த வேண்டும்.

தொழிலாளா்களின் கைகளைக் கழுவுவதற்கு கிருமி நாசினி, சோப்பு, தண்ணீா் உள்ளிட்டவை வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளா்களுக்கும் முகக்கவசம் வழங்குவதோடு, கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுவது குறித்தும், வீட்டிலிருந்து புறப்படும் முன்னரும் வீட்டிற்குச் சென்றதும் சுத்தமாக இருப்பதன் தேவையை தொழிலாளா்களுக்கு உணா்த்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும் பால்

வடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனை ஏற்று தற்போது பால்வடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com