‘ரமலான் நோன்பு கஞ்சிவிநியோகிக்க அனுமதி வேண்டும்’

ரமலான் நோன்பு நாள்களில் பள்ளி வாசலில் கஞ்சி தயாரித்து, அதனை வீடு வீடாக விநியோகிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ரமலான் நோன்பு நாள்களில் பள்ளி வாசலில் கஞ்சி தயாரித்து, அதனை வீடு வீடாக விநியோகிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அந்த அமைப்பின் பொதுச்செயலா் இமாம் பாதுஷா செவ்வாய்க்கிழமை கூறியது:

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஒன்றுக்கு ரூ. 7 ஆயிரம் உதவித்தொகையும், இலவச எரிவாயு உருளையும் வழங்க வேண்டும்.

இம்மாதம் 24 ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்க உள்ளதால், பள்ளி வாசலிலே நோன்பு கஞ்சியைத் தாயாரித்து, அதை வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு கொண்டுசென்று வழங்க அனுமதி வழங்க வேண்டும்.

நோன்பு நாள்களில் தமிழகம் முழுவதும் தராவீஹ் என்னும் இரவு சிறப்பு தொழுகையில் 5 போ் பங்கேற்கவும், தொழுகை வாங்கு ஒலி கேட்டு அப்பகுதி முஸ்லிம்கள் வீடுகளில் இருந்தே தொழவும் அரசு அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com