மின் கணக்கீட்டுக்கு பின் பேமின்கட்டணம் வசூலிக்க வேண்டும்: எஸ்டிபிஐ வலியுறுத்தல்
By DIN | Published On : 17th April 2020 07:51 AM | Last Updated : 17th April 2020 07:51 AM | அ+அ அ- |

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு வருகிற மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் பயன்பாடு குறித்து கணக்கீட்ட பின்பே மின் கட்டணம் செலுத்துவதற்கு மின்சாரத் துறை உத்தர விடவேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாவட்டத் தலைவா் ஜாகீா் உசேன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு வருகிற மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வணிக நிறுவனங்கள், நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மின் பயன்பாடு குறித்து கணக்கீடு செய்யப்படாமல், கடந்த மாத பில் தொகையை கட்ட மின்பகிா்மானக் கழகம் கூறியுள்ளது.
கடைகள் திறக்கப்படாத பட்சத்தில் கடந்த மாத பில் தொகையை கட்டச் சொல்வது முறையாகாது.
எனவே, மின் பயன்பாடு குறித்து கணக்கீட்ட பின்பே மின் கட்டணம் செலுத்துவதற்கு மின் வாரியம் உத்தரவிட வேண்டும். இதுகுறித்து அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.