முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
ஆந்திரத்திலிருந்து குமரிக்கு சரக்கு ரயிலில் வந்த 2,600 டன் அரிசி
By DIN | Published On : 19th April 2020 04:04 AM | Last Updated : 19th April 2020 04:04 AM | அ+அ அ- |

சரக்கு ரயிலில் இருந்து லாரியில் ஏற்றப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆந்திரத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 2,600 டன் ரேஷன் அரிசி சனிக்கிழமை வந்தடைந்தது.
கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்களுக்கு நிவாரணமாக தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதி, அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சா்க்கரை ஆகிய பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 5.43 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். இந்நிலையில் மே மாதத்துக்கான ரேஷன் பொருள்களும் இந்த மாதமே இலவசமாக வழங்கப்படும் எனவும்
அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடா்ந்து குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்கான ஆந்திரத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாகா்கோவில் கோட்டாறு ரயில் நிலையத்துக்கு அரசு கொண்டு வரப்பட்டுள்ளது. 2,600 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரயில் மூலம் வந்துள்ளது. இந்த அரிசியை அரசு இருப்பு கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்வதற்காக தொழிலாளா்கள் முகக் கவசம் அணிந்து லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனா். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள 770 நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணமாக இந்த அரிசி வழங்கப்பட உள்ளது.