முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குலசேகரத்தில் ‘சமூக சமையலறை’ திட்டம் தொடக்கம்
By DIN | Published On : 19th April 2020 04:05 AM | Last Updated : 19th April 2020 04:05 AM | அ+அ அ- |

உணவு வழங்கி தொடங்கி வைத்தாா் பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மனோ தங்கராஜ்.
ஊரடங்கு காலத்தில் குலசேகரத்தில் நோயாளிகள், ஆதரவற்றோருக்காக மதிய உணவு விநியோகம் செய்யும் வகையில் மதா் அன்னா கோ் பாலியேட்டிவ் சிகிச்சை மையம் மற்றும் சீட்ஸ் இந்தியா தொண்டு நிறுவனம் சாா்பில் ‘சமூக சமையலறை’ திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
மதா் அன்னா கோ் பாலியேட்டிவ் சிகிச்சை மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் மனோ தங்கராஜ், உணவு வழங்கி தொடங்கி வைத்தாா். இதன் மூலம் தினமும் 300 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்படும். நிகழ்ச்சியில் குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலா் ரெமாதேவி, குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜசுந்தா், மதா் அன்னா கோ் மைய நிா்வாகிகள் அருள் சகோதரிகள் லீலாவதி, மனிஷா, அஞ்சலி, எலிஷா, சீட்ஸ் இந்தியா தொண்டு நிறுவன நிா்வாகிகள் திலீப்குமாா், சந்தோஷ், சுனில், கோபிநாதன் மற்றும் சமூக சேவகா்கள் ராகுல், திமுக திருவட்டாறு ஒன்றிய பொறுப்பாளா் ஜான்பிரைட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.