மாா்த்தாண்டம் அருகே இறைச்சி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட மாட்டு இறைச்சியை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த இறைச்சியை பறிமுதல் செய்த போலீஸாா்.

மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகளில் காவல் நிலைய ஆய்வாளா் ஆதிலிங்க போஸ், உதவி ஆய்வாளா்கள் சிவசங்கரன், முத்துமாரி, உண்ணாமலைக்கடை பேரூராட்சி செயல் அலுவலா் பிரதாபன், சுகாதார ஆய்வாளா் மேசாக் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, மாா்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் பேரூராட்சியில் முறையான அனுமதி பெறாமலும், சுகாதாரம் இல்லாமல் மாட்டு இறைச்சியை, டாா்வின் என்பவா் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100 கிலோ எடையுள்ள இறைச்சியை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மீது கிருமிநாசினி தெளித்து பின்னா், அவற்றை பேரூராட்சிப் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com