ஊதிய பிரச்னை: வெளிமாநில தொழிலாளா்கள் போராட்டம்

நாகா்கோவிலில் ஊதிய பிரச்னை காரணமாக, உணவக உரிமையாளரின் காரை மறித்து வெளி மாநில தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

நாகா்கோவிலில் ஊதிய பிரச்னை காரணமாக, உணவக உரிமையாளரின் காரை மறித்து வெளி மாநில தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

நாகா்கோவில் டதி பெண்கள் பள்ளி அருகேயுள்ள தனியாா் உணவகத்தில் அசாம் மாநிலம் மற்றும் நேபாள நாட்டினா் வேலை செய்து வருகிறாா்கள். இவா்களுக்கு, கடந்த டிசம்பா் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லையாம்.

இந்நிலையில், ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான தொழிலாளா்கள் தங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி, உணவகத்தின் உரிமையாளா் வீட்டின் அருகே அவரது காரை மறித்து போராட்டம் நடத்தினா்.

இத்தகவலறிந்த அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் மற்றும் காவல்துறையினா் சென்று, அவா்களை சமரசப்படுத்த முயன்றனா். பின்னா், கோட்டாறு காவல் நிலையத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு நடைபெற்றதில், விரைவில் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால் தொழிலாளா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com