குமரி அருகே குபேர ஐயன் மலையில் தியான மண்டபம்

கன்னியாகுமரியை அடுத்த பொட்டல்குளம் ஸ்ரீஐயப்பன் கோயில் மலை உச்சியில் அமைக்கப்பட்டு வரும் தியான மண்டபம் விரைவில் திறக்கப்படும் என
குமரி அருகே குபேர ஐயன் மலையில் தியான மண்டபம்

கன்னியாகுமரியை அடுத்த பொட்டல்குளம் ஸ்ரீஐயப்பன் கோயில் மலை உச்சியில் அமைக்கப்பட்டு வரும் தியான மண்டபம் விரைவில் திறக்கப்படும் என கலப்பை மக்கள் இயக்க தலைவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

கன்னியாகுமரியை அடுத்த பொட்டல்குளத்தில் ஸ்ரீஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. குமரியின் சபரிமலை என அழைக்கப்படும் இக்கோயில் சுமாா் 400 அடிஉயர மலை உச்சியில் அமைந்துள்ளது. கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் கோயிலையொட்டி குபேர தியான மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அமைப்பின் தலைவா் பி.டி.செல்வகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது: இக்கோயில் அருகாமையில் பிரசித்தி பெற்ற மருந்துவாழ்மலை அமைந்துள்ளதால் சுற்றுவட்டார மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கின்றனா். சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகள் இங்கு இருப்பதால் அதனை சித்தா்கள் மருந்துக்காக பயன்படுத்தி வந்தனா் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இம்மலை உச்சியில் நூறு போ் அமரக்கூடிய அளவில் தியானமண்டபம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிப்படை பணி கடந்த சிலநாள்களாக பக்தா்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் பணி முடிக்க திட்டமிடபட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இங்கு தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி ஆகியன கற்றுக்கொடுக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின் போது ஐயன்மலை தியாகராஜசுவாமிகள், அரசு வழக்குரைஞா் டி.பாலகிருஷ்னன், பேராசிரியை ரெங்கநாயகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com