முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கரோனா தடுப்புப் பணிகளுக்கு கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள்: என். தளவாய்சுந்தரம் தகவல்
By DIN | Published On : 03rd August 2020 09:12 AM | Last Updated : 03rd August 2020 09:12 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளுக்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம்.
கரோனா மருத்துவ சிகிச்சை முன்னேற்றங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தாா். கூட்டத்தில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு பேசினாா்.
தொடா்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் கூறியது: கரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதலாக மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கரோனாவால் பாதிப்புக்குள்ளாகும் களப் பணியாளா்களுக்காக 100 தனி படுக்கை வசதிகள் மற்றும் கழிவறைகளுடன் கூடிய தனிஅறைகள், ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்ட 660 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கரோனா வாா்டில் பணியாற்றும் மருத்துவா்கள்,செவிலியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள், என் 95 முகக் கவசங்கள் போன்றவை போதுமானஅளவு இருப்பில் உள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டநோயாளிகள் அனைவருக்கும் தரமான உணவு, கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவு வழங்கப்படுகிறது என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) போஸ்கோராஜ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைமுதல்வா் இரா.சுகந்திராஜகுமாரி, கோட்டாறு
அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி முதல்வா் கிளாரன்ஸ் டேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.