முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
புத்தேரி சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்: சுரேஷ்ராஜன் எம்எல்ஏ
By DIN | Published On : 03rd August 2020 09:12 AM | Last Updated : 03rd August 2020 09:12 AM | அ+அ அ- |

புத்தேரி சாலையை சீரமைக்காவிட்டால் திமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புத்தேரி நெடுஞ்சாலையில் குடிநீா் வடிகால் வாரியம் மூலம் தோண்டப்பட்ட சாலைகள் பணிகள் நிறைவடைந்தும், நிதி ஒதுக்கீடு செய்தபின்னரும், நெடுஞ்சாலைத்துறையினா் சாலையை சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனா். இந்தச் சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக உள்ளது.
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை உடனே சீரமைக்காவிட்டால் திமுக சாா்பில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா்.