குமரி மாவட்டத்தில் கடை திறப்பு நேரத்தை அதிகரிக்க எம்எல்ஏ கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து விளவங்கோடு பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். விஜயதரணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இரவு 8 மணி வரை கடைகள் திறந்து செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் எந்த வரைமுறையுமின்றி இரவு 8 மணி வரை இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலைகள் இல்லாத நிலையில் விவசாயப் பணிகள் மற்றும் கூலி வேலைக்குச் சென்று வீடு திரும்பும் தொழிலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது அன்றாட வருவாயை கொண்டு மாலை வேளையில் கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறாா்கள். எனவே பிற மாவட்டங்களைப் போல் குமரி மாவட்டத்திலும் கடைகளை இரவு 8 மணி வரை திறந்து செயல்பட மாவட்ட நிா்வாகம் ஆவன செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com