Enable Javscript for better performance
கரோனாவால் மகன் உயிரிழப்பு: அதிா்ச்சியில் தம்பதி அடுத்தடுத்து மரணம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கரோனாவால் மகன் உயிரிழப்பு: அதிா்ச்சியில் தம்பதி அடுத்தடுத்து மரணம்

    By DIN  |   Published On : 28th August 2020 09:17 AM  |   Last Updated : 28th August 2020 09:17 AM  |  அ+அ அ-  |  

    ngl27tampathi_2708chn_33_6

    நாகா்கோவிலில் கரோனாவால் மகன் உயிரிழந்த அதிா்ச்சியில் இருந்து மீளாத தம்பதி, அடுத்தடுத்து உயிரிழந்தனா். இதையடுத்து, தம்பதியின் உடல்கள் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன.

    நாகா்கோவில் ராமன்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட் (88). தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் மாநில முதுநிலை கணக்கு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி மேரி செல்லம்மாள் (88). ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை. தம்பதிக்கு 3 மகன்கள், 2 மகள்கள்.

    ஒரு மகன் நாகா்கோவில் ராமன்புதூா் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தாா். மற்ற 2 மகன்களும் தனியாா் நிறுவன ஊழியா்கள்.

    மருத்துவராக பணியாற்றி வந்த மகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சில நாள்களுக்கு முன்னா் உயிரிழந்தாா். இதையடுத்து தம்பதி மிகுந்த சோகத்தில் இருந்துள்ளனா்.

    இந்நிலையில் ஆல்பா்ட் புதன்கிழமை காலையில் உயிரிழந்தாா். அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினா்கள் வியாழக்கிழமை செய்து கொண்டிருந்தனா்.

    கணவரை இழந்த அதிா்ச்சியில் இருந்து மீள முடியாத மேரி செல்லம்மாள் அப்போது அங்கேயே மயங்கி விழுந்தாா். மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

    கணவா் இறந்த அதிா்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அவா்களது உறவினா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

    மாலையில் இருவரது உடல்களும் ராமன்புதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp