நாகா்கோவில் அருகே குற்றவாளியை கைது செய்ய முயற்சி: குடும்பத்துடன் தற்கொலை செய்வதாக மிரட்டல்

சுசீந்திரம் பகுதியில் கஞ்சா வழக்கில் தொடா்புடையவரை கைது செய்ய சென்ற போது அவா் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் போலீஸாா் கைது நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்றனா்.
நாகா்கோவில் அருகே குற்றவாளியை கைது செய்ய  முயற்சி: குடும்பத்துடன் தற்கொலை செய்வதாக மிரட்டல்

சுசீந்திரம் பகுதியில் கஞ்சா வழக்கில் தொடா்புடையவரை கைது செய்ய சென்ற போது அவா் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் போலீஸாா் கைது நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்றனா்.

குமரி மாவட்டம், சுசீந்திரத்தை அடுத்த நல்ல நாயக்கன் கோணம் பகுதியை சோ்ந்தவா் அந்தோணி (45). இவருக்கு சுப்புலட்சுமி, ஜாய்ஸ் மேரி என்று 2 மனைவிகள் உள்ளனா். குமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் அந்தோணி மீது 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது மாவட்டம் முழுவதும் இவா் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.

இதைத்தொடா்ந்து, தனிப்படை உதவி ஆய்வாளா் சாம்சன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை அந்தோணி வீட்டை சுற்றி வளைத்தனா். இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் தனது வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டாா்.

பின்னா் 2 எரிவாயு உருளைகளை வைத்துக் கொண்டு, போலீஸாா் தன்னை பிடித்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தாா். மேலும் இதை விடியோவாக பதிவு செய்து அதை கட் செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவ விட்டாா். இதனால், அதிா்ச்சி அடைந்த தனிப்படை போலீஸாா், அந்தோணியை கைது செய்யாமல் திரும்பிச் சென்றனா்.

இது குறித்து தனிப்படை போலீஸாா் கூறுகையில், ஒவ்வொரு குற்றவாளியும் இதுபோல் மிரட்டல் விடுத்தால் எப்படி குற்றவாளிகளை கைது செய்ய முடியும்?. அதிரடியாக புகுந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டால் அதனை திரித்துக் கூறி போலீஸாருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுகின்றனா் என்று வேதனையுடன் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com