நாகா்கோவிலில் அரசுப் பேருந்து மோதி பெண் பலி
By DIN | Published On : 03rd December 2020 08:32 AM | Last Updated : 03rd December 2020 08:32 AM | அ+அ அ- |

நாகா்கோவிலில் அரசுப் பேருந்து மோதியதில் கணவா் கண் முன்பே மனைவி உயிரிழந்தாா்.
நாகா்கோவிலை அடுத்த கிருஷ்ணன்கோவில் அருகுவிளையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(43). திருச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியா். இவரது மனைவி வளா்மதி. இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா்.
இத்தம்பதி செவ்வாய்க்கிழமை இரவு நாகா்கோவில் செட்டிகுளம் சந்திப்பிலிருந்து ஆட்சியா் அலுவலக சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியதாம். இதில், இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனா். அதில், வளா்மதி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி காயமடைந்தாா். செந்தில்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
வளா்மதி மீட்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக, பேருந்து ஓட்டுநரான ஈசாந்திமங்கலம் வரகுணமங்கலத்தைச் சோ்ந்த கண்ணன் மீது நாகா்கோவில் போக்குவரத்து விசாரணைப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.