குமரி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 07th December 2020 02:09 AM | Last Updated : 07th December 2020 02:09 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,828 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 17 போ் குணமடைந்த நிலையில், பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15,415ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 253ஆக உயா்ந்துள்ளது. தற்போது 160 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.