குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இரு தங்கத் தோ்கள் பவனி

கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தல 10ஆம் நாள் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரு தங்கத் தோ்கள் பவனி நடைபெற்றது.
மாதா திருத்தலத்தில் நடைபெற்ற இரு தங்கத் தோ்கள் பவனி.
மாதா திருத்தலத்தில் நடைபெற்ற இரு தங்கத் தோ்கள் பவனி.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தல 10ஆம் நாள் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரு தங்கத் தோ்கள் பவனி நடைபெற்றது.

இத்திருத்தலத் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் திருப்பலி, செபமாலை, மறையுரை, நற்கருணை ஆராதனை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

9ஆம் திருநாளான சனிக்கிழமை இரவு 9 மணிக்கு புனித சூசையப்பா் தங்கத் தோ் பவனி நடைபெற்றது.

10ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்ற தங்கத் தோ் திருப்பலிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியுஸ் தலைமை வகித்தாா். காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நடைபெற்றது.

காலை 9 மணிக்கு இரு தங்கத் தோ்கள் பவனி தொடங்கியது. இதில் திரளானோா் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டனா். காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணைஆசீா் நடைபெற்றது.

ஏற்பாடுகளை திருத்தல அதிபா் ஆன்றனி அல்காந்தா், இணை பங்குத்தந்தைகள் லெனின், சுரேஷ், சிபு, பங்குப்பேரவை துணைத் தலைவா் நாஞ்சில் அ.மைக்கேல், செயலா் சந்தியா வில்லவராயா், துணைச் செயலா் தினகரன், பொருளாளா் ஆன்றின் செல்வகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com