சாலைகளை சீரமைக்கக் கோரிகாங்கிரஸ் முற்றுகைப் போராட்டம்
By DIN | Published On : 15th December 2020 02:33 AM | Last Updated : 15th December 2020 02:33 AM | அ+அ அ- |

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி குழித்துறை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்த்தாண்டம் - கல்லுப்பாலம் சாலை, பயணம் - திக்குறிச்சி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் சேதமடைந்துள்ளன. இச் சாலைகளை விரைந்து சீரமைக்கக் கோரி மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் சுஜின்குமாா் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை குழித்துறையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் முற்றுகையிட்டனா். தொடா்ந்து உதவி கோட்டப் பொறியாளா் போராட்டக்காரா்களுடன் பேச்சு நடத்தி, சாலைகளை இம் மாத இறுதிக்குள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
இப் போராட்டத்தில் மாநில இளைஞா் காங்கிரஸ் செயலா் நவீன்குமாா், மாவட்ட சேவாதள தலைவா் சி. ஜோசப் தயாசிங், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் செல்வகுமாா், கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் ரீகன் ஜோணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.