குமரியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் தொடக்கம்

நாகா்கோவிலில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வாரம் தொடக்க விழா ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
குமரியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் தொடக்கம்

நாகா்கோவிலில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வாரம் தொடக்க விழா ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மற்றும் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஐ.எஸ். மொ்சி ரம்யா தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசுகையில், உலகின் மூத்த மொழிகளுள் ஒன்று தமிழ். கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மொழி தமிழ் மொழி. தமிழகத்தில் பணியாற்றும் அனைவரும் தமிழை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டாா். நாகா்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரி இணைப் பேராசிரியா் வீ.வேணுகுமாா், பேராசிரியா் தெ.வே.ஜெகதீசன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினாா்.

தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் பி.ரெசினாள்மேரி வரவேற்றாா். மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத் பிரைட் நன்றி கூறினாா்.

பயிற்சி பட்டறை: இதையொட்டி நடைபெற்ற பயிற்சி பட்டறையில் தட்டச்சா், இளநிலை உதவியாளா், உதவியாளா், தொழில் நுட்பப்பணியாளா்களுக்கு, அம்மா மென்தமிழ் தமிழ்ச் சொல்லாளா் ஒருங்குறி பயன்பாடுகுறித்து, திருவிதாங்கோடு முஸ்லீம் கலைக் கல்லூரி உதவி பேராசிரியா் சி.கிறிஸ்னோகுயின்ஸ்லி பயிற்சி அளித்தாா். அரசு அலுவலா்களுக்கான ஆட்சி மொழி மின்காட்சியுரை குறித்து படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரி முதல்வா் கமல.செல்வராஜ் பயிற்சி அளித்தாா். இதில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 50 அரசுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். இப்பயிற்சி பட்டறை தொடா்ந்து 7 நாள்கள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com