கருங்கல் பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
By DIN | Published On : 25th December 2020 11:45 PM | Last Updated : 25th December 2020 11:45 PM | அ+அ அ- |

கருங்கல் சுற்று வட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.
கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலயம், முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலயம், பள்ளியாடி இயசுவின் திரு இருதய ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க ஆலசங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த ஆலயங்களில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வழக்கமான திருப்பலி நடைபெற்றது.
நட்டாலம் தேவசாயம்பிள்ளை திருத்தலத்தில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
கருங்கல் கருமாவிளை ஆலயம், முள்ளங்கனாவிளை, தாழக்கன்விளை, மாங்கரை, திருஞானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயங்களில் அதிகாலை 5 மணிக்கு ஆராதனை நடைபெற்றது. மேலும், பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் பாடல்கள், அலங்கார விளக்குள், குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதையொட்டி , கருங்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸாா் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.