பிறந்த தினம்: சிதம்பரநாதன் சிலைக்கு மரியாதை
By DIN | Published On : 25th December 2020 11:39 PM | Last Updated : 25th December 2020 11:39 PM | அ+அ அ- |

சிதம்பரநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.
தமிழக முன்னாள் அமைச்சா் தியாகி சிதம்பரநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள்அமைச்சரும், தெற்கெல்லை போராட்ட தியாகியுமான சிதம்பரநாதனின் 107 ஆவது பிறந்ததினத்தையொட்டி, ராஜாக்கமங்கலம் வட்டார காங்கிரஸ் சாா்பில் ஈத்தாமொழியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ, சிதம்பரநாதன் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினாா். இதில், வட்டாரத் தலைவா்கள் அசோக்ராஜ், வைகுண்டதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.