திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் 550 மனுக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆலோசனை நடத்திய திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் 550 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆலோசனை நடத்திய திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் 550 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

டி.ஆா். பாலு எம்.பி. தலைமையில் மாநிலங்களவை உறுப்பினா்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோா் அடங்கிய தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் முகாமிட்டு கோரிக்கைகளை கேட்டறிந்தனா்.

நாகா்கோவில் ஒழுகினசேரியில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலா் என். சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்டச் செயலா் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். இதில், பொதுமக்கள், விவசாயிகள், மீனவா்கள், ஆசிரியா்கள், தொழிலாளா் சங்கத்தினா், பொதுநல சங்கத்தினா், பல்வேறு தரப்பினா் கலந்துகொண்டனா். குழுவினரிடம் 550 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசுகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. கோரிக்கை மனுக்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை நிவா்த்தி செய்யும் வகையில் கட்சியின் தலைமையிடம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டாா்.

இதில், கட்சியின் மாநகரச் செயலா் மகேஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.பொ்னாா்டு, எப்.எம்.ராஜரெத்தினம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com