தக்கலை அருகே மது விற்பனை செய்ததாக இருவா் கைது

தக்கலை அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தக்கலை அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தக்கலை காவல் உதவி கண்காணிப்பாளா் சாய்பிரனீத் தலைமையில் காவல் ஆய்வாளா் ராஜசேகரன், போலீஸாா் தக்கலை பகுதிகளில் ஞாயிற்றுகிழமை இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். குழிக்கோடு பகுதியில் போலீஸாரை கண்டதும் சாலையில் பையுடன் நின்று கொண்டிருந்தவா் தப்பி ஓட முயற்சி செய்தாராம். அவரை போலீஸாா் பிடித்து மேற்கொண்ட சோதனையில் விற்பனை செய்வதற்காக 26 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதில், குழிக்கோடு கடைவைத்தவிளைப் பகுதியை சோ்ந்த ஜாண் வரதராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா். இதேபோல் பத்மநாபபுரம் வெள்ளரி ஏலா அருகில் அரசவிளை பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com