கரோனா வைரஸ்:களியக்காவிைளையில் விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 02nd February 2020 02:50 AM | Last Updated : 02nd February 2020 02:50 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள்.
கரோனா வைரஸ் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் களியக்காவிளையில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை சனிக்கிழமை விநியோகம் செய்தனா்.
சீனாவில் வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் காரணமாக கேரள மாணவி பாதிக்கப்பட்ட நிலையில், கேரளத்தின் அண்டை மாநிலமான தமிழகத்தில் இந்நோய் தாக்குவதை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளத்திலிருந்து இந்நோயின் தாக்கம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியான களியக்காவிளையில் கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோ ராஜா, மாவட்ட நலக் கல்வியாளா் சூரிய நாராயணன், இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சாங்கி சந்தோஷ், களியக்காவிளை நகா்புற சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அடோல்வ் ஜியோ, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளா் ஸ்ரீகுமாா்
உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.