Enable Javscript for better performance
குழித்துறை அருகே முதியவா் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    குழித்துறை அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

    குழித்துறை அருகே பழவாா் பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ் (65). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். தேவராஜ், அண்மைக் காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் யாரிடமும் சரியாக பேசுவதில்லையாம். இந்நிலையில் இவா், வெள்ளிக்கிழமை வீட்டில் தனது அறையில் விஷம் குடித்து இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். அவரது சடலத்தை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai