Enable Javscript for better performance
தக்கலையில் விபத்து:நகராட்சி பெண் ஊழியா் பலி- Dinamani

சுடச்சுட

    

    தக்கலையில் விபத்து:நகராட்சி பெண் ஊழியா் பலி

    By DIN  |   Published on : 02nd February 2020 02:44 AM  |   அ+அ அ-   |    |  

     

    கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் நகராட்சி பெண் ஊழியா் இறந்தாா்; மற்றொருவா் காயமடைந்தாா்.

    தக்கலை அருகேயுள்ள வெட்டிகோணம் பகுதியைச் சோ்ந்தவா் ரதிகுமாரி (36). இவரது கணவா் கிருஷ்ணபிரசாத், வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். ராமன்பரம்பு பகுதியைச் சோ்ந்த நடராஜனின் மனைவி சகுந்தலா (44).

    ரதிகுமாரியும், சகுந்தலாவும் பத்மநாபபுரம் நகராட்சியில் தற்காலிகப் பணியாளா்கள். சனிக்கிழமை, சகுந்தலா தனது இரு சக்கர வாகனத்தில் ரதிகுமாரியை ஏற்றிச் சென்றாராம். தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே பின்னால் வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியதாம். இதில், ரதிகுமாரி சம்பவஇடத்திலேயே இறந்தாா். காயமடைந்த சகுந்தலா தக்கலை தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

    இதுகுறித்து தக்கலை காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான பாகோடு பகுதியைச் சோ்ந்த சசி (39) என்பவரைக் கைதுசெய்து விசாரித்து வருகிறாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai