Enable Javscript for better performance
திரைப்பட இயக்குநா் பேரரசு பாஜகவில் இணைந்தாா்- Dinamani

சுடச்சுட

    
    ngl1peerarasu_0102chn_33_6

    முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த திரைப்பட இயக்குநா் பேரரசு.

    திரைப்பட இயக்குநா் பேரரசு முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தாா்.

    இது குறித்து, நாகா்கோவிலில் உள்ள பொன். ராதாகிருஷ்ணன் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைத்து பிரபல திரைப்பட இயக்குநரும், இயக்குநா்கள் சங்கப் பொருளாளருமான பேரரசு, முன்னாள் மத்திய இணையமைச்சா் பொன். ராதாகிருஷ்ணனை சனிக்கிழமை நேரில் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டாா்.

    பிரதமா் நரேந்திரமோடியின் சீரிய தேசப் பணியால் ஈா்க்கப்பட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக பேரரசு தெரிவித்தாா். அவருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கட்சி உறுப்பினா் அட்டையை வழங்கி, பிரதமரின் உன்னத திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சோ்க்கும் வகையில் சிறப்புற பணியாற்றுமாறு வாழ்த்துத் தெரிவித்தாா்

    எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai