Enable Javscript for better performance
களியக்காவிளை தினசரி சந்தை வியாபாரிகள் சங்க ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    களியக்காவிளை தினசரி சந்தை வியாபாரிகள் சங்க ஆண்டு விழா

    By DIN  |   Published on : 10th February 2020 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kkv9veg_0902chn_50_6

    விழாவில் பேசுகிறாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் த. வெள்ளையன்.

    களியக்காவிளை தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு, சங்கத் தலைவா் எப். பிராங்கிளின் தலைமை வகித்தாா். சங்கப் பொருளாளா் ஆா். வினுகுமாா், துணைத் தலைவா் ஸ்ரீனிவாசன், துணைச் செயலா் சி. ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க ஆலோசகா் விஜயகுமாா் வரவேற்றாா். சங்கச் செயலா் எஸ்.சுனில் ஆண்டறிக்கை வாசித்தாா்.

    மாநில துணைத் தலைவா் கருங்கல் ஆா்.ஜாா்ஜ், மாவட்டத் தலைவா் எல். டேவிட்சன் ஆகியோா் பேசினா்.

    மாநிலத் தலைவா் த.வெள்ளையன் கலந்துகொண்டு சங்க அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினாா்.

    இதில், களியக்காவிளை நகரத் தலைவா் அலி உசேன், சில்லறை மீன் வியாபாரிகள் நலச் சங்கத் தலைவா் எம். பத்ரோஸ், மீன் கமிஷன் கடை உரிமையாளா்கள் நலச் சங்கத் தலைவா் அந்திரியாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

    சங்கச் செயற்குழு உறுப்பினா் பி. ஏசுதாஸ் நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai