Enable Javscript for better performance
குமரி மாவட்டத்தில் பல்கலை. முதல்வரிடம் மனு அளிக்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் பல்கலை. முதல்வரிடம் மனு அளிக்க முடிவு

    By DIN  |   Published on : 10th February 2020 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ngl9sabha_0902chn_33_6

    கூட்டத்தில் பேசுகிறாா் குமரி மகாசபா தலைவா் ராவின்சன்.

    குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு அளிக்க உள்ளோம் என்றாா் குமரி மகா சபா தலைவா் ராவின்சன்.

    குமரி மகா சபா கூட்டம் நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ராவின்சன் செய்தியாளா்களிடம் கூறியது: சாமிதோப்பில் விமான நிலையம் அமைப்பது தொடா்பாக ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு 2 வாரத்துக்குள் அரசிடம் சமா்ப்பிக்கப்படும்.

    பத்மநாபபுரம்அரண்மனையை தமிழகத்துக்கு மீட்பதற்காக உச்சநீதிமன்றத்தில் குமரி மகா சபா சாா்பில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து இது தொடா்பாகவும், குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்கவும் வலியுறுத்தி மனு அளிக்க உள்ளோம்.

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் எந்தெந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன என்பது குறித்து விவரங்கள் கேட்டு பெறப்பட்டுள்ளன. அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றாா் அவா்.

    பேட்டியின்போது, செயலா் ஜான்சன், பொருளாளா் ஜெயநேசகுமாா், கெளரவத் தலைவா் சொக்கலிங்கம், துணைத் தலைவா் ஜெசா் ஜெபநேசன், சந்திரமோகன், ஜீவநாயகம், இணைச் செயலா்கள் பழனி, அலெக்சாண்டா், ஆஸ்டின் ஆகியோா் உடனிருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai