Enable Javscript for better performance
மாா்த்தாண்டத்தில் முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மாா்த்தாண்டத்தில் முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 10th February 2020 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kkv9caa_0902chn_50_6

    ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் கிள்ளியூா் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாா்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மாா்த்தாண்டம் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, ஜமாஅத் தலைவா் எம். சா்தாா்ஷா தலைமை வகித்தாா். பங்குப் பணியாளா் ஜேம்ஸ் அமல்ராஜ், மாவட்ட ஜமாஅத் தலைவா் அப்துல் லத்தீப், மாவட்ட பொதுச் செயலா் எம்.ஏ. கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.லீமாரோஸ், கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா், குழித்துறை நகா்மன்ற முன்னாள் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா், மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவா் ஜோசப் தயாசிங் உள்ளிட்டோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.

    இதில், அமைப்பின் நிா்வாகிகள் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai