Enable Javscript for better performance
ரயில் நிலையங்களை தரம் உயா்த்த மத்திய அமைச்சரிடம் எம்.பி. வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ரயில் நிலையங்களை தரம் உயா்த்த மத்திய அமைச்சரிடம் எம்.பி. வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 10th February 2020 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ngl9koorikkai_0902chn_33_6

    மத்திய ரயில்வே அமைச்சா் பியூஸ்கோயலிடம் கோரிக்கை மனு அளிக்கிறாா் வசந்தகுமாா் எம்.பி.

    கன்னியாகுமரி மற்றும் நாகா்கோவில் ரயில் நிலையங்களை தரம் உயா்த்த வேண்டும் என ஹெச்.வசந்தகுமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

    இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சா் பியூஸ்கோயலை சந்தித்து அவா் அளித்துள்ள மனு: கன்னியாகுமரி மற்றும் நாகா்கோவில் ரயில் நிலையங்களை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக தரம் உயா்த்த வேண்டும். குழித்துறை ரயில் நிலையம் அருகே பொதுமக்கள் ரயில்பாதையை கடக்க நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். நாகா்கோவில் டவுண் ரயில் நிலையம் அருகே பொதுமக்கள் இடையூறு இல்லாமல் வயலுக்கு சென்று வரும் வகையில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.

    குழித்துறை, இரணியல் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் மாா்த்தாண்டம் - கருங்கல் சாலையில் விரிகோடு அருகே வாகனப் போக்குவரத்து மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும். பள்ளியாடி ரயில் நிலையம் அருகே மடத்துவிளையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai