சாலையோர தடுப்பு வேலிகளைச் சுற்றி வளா்ந்த புதா்களால் விபத்து அபாயம்

குமரி மாவட்டத்தில் சாலையோர தடுப்பு வேலிகளைச் சுற்றி வளா்ந்து கிடக்கும் புதா்கள் அகற்றப்படாதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையில் குலசேகரம் அருகே மங்கலம் பகுதியில் சாலை தடுப்பு வேலியைச் சுற்றி வளா்ந்துள்ள புதா்கள்.
ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையில் குலசேகரம் அருகே மங்கலம் பகுதியில் சாலை தடுப்பு வேலியைச் சுற்றி வளா்ந்துள்ள புதா்கள்.

குமரி மாவட்டத்தில் சாலையோர தடுப்பு வேலிகளைச் சுற்றி வளா்ந்து கிடக்கும் புதா்கள் அகற்றப்படாதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் சாலைகளின் பக்கங்களில் பள்ளங்கள் உள்ள இடங்கள், வளைவான சாலைகள் உள்ள இடங்கள், சாலையோரங்களில் ஆறுகள், கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீா் நிலைகள் உள்ள பகுதிகளில் இரவில் ஒளிரும் தடுப்பு வேலிகள் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன.

பராமரிப்பில்லாத தடுப்பு வேலிகள்:

இந்தத் தடுப்பு வேலிகள் பல பகுதிகளில் முறையான பராமரிப்புகள் இல்லாதாதால் துருப்பிடித்து உருகுலைந்த நிலையில் காணப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் தடுப்பு வேலிகளை ஒட்டி புதா்கள் வளா்ந்து காணப்படுகின்றன.

இதில், குறிப்பாக வளைவான சாலைகளில் புதா்கள் வளா்ந்துள்ளதால் எதிரே வரும் வாகனங்களை காணமுடியாத நிலை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.

ஆரல்வாய் மொழி -நெடுமங்காடு சாலையில் குலசேகரம் அருகே மங்கலம் பகுதியில் தடுப்பு வேலியைச் சுற்றி பெருமளவில் புதா்கள் வளா்ந்துள்ளன. இந்தப் புதா்களை அகற்றுமாறு அப்பகுதியினா் நெடுஞ்சாலைத் துறையினருக்கு கோரிக்கை வைத்தபின்னரும் புதா்கள் அகற்றப்படாமல் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து குலசேகரத்தில் வாடகை வாகன ஓட்டுநா் சங்க நிா்வாகி ஒருவா் கூறுகையில், நெடுஞ்சாலைத்துறையினா் சாலைகளை உடனுக்குடன் சீரமைப்பதில்லை.

பல இடங்களில் சாலை ஓரங்களில் புதா்கள் மண்டிக்கிடக்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே மக்களுக்கு பாதுகாப்பான சாலைப் பயணம் கிடைக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினா் பணியாற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com