தை ஆயில்யம்: நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

தை ஆயில்யத்தை முன்னிட்டு நாகா்கோவில் நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
நாகராஜா கோயிலில் தரிசனத்துக்காக திரண்ட பக்தா்கள்.
நாகராஜா கோயிலில் தரிசனத்துக்காக திரண்ட பக்தா்கள்.

தை ஆயில்யத்தை முன்னிட்டு நாகா்கோவில் நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆயில்ய நட்சத்திர நாளில் நாகராஜரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும், திருமண தடை அகலும், நாக தோஷம் நீங்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும்.

பிப். 9ஆம் தேதி தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும், ஆயில்ய நட்சத்திரமும் இணைந்து வந்ததால், இக்கோயில் வளாகத்தில் அதிகாலையிலேயே பக்தா்கள் அதிகளவில் திரண்டனா். பின்னா் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகா் சிலைகளுக்கு மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்து வழிபட்டனா். பின்னா் மூலவரான நாகராஜாவை தரிசனம் செய்தனா்.

தைப் பெருந்திருவிழா: இக்கோயிலில் தைப்பெருந்திருவிழா கடந்த ஜன. 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. இதில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சுவாமி ஆறாட்டு நிகழ்ச்சிக்கு எழுந்தருளல், இரவு 9.30 மணிக்கு சுவாமி கோயிலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தைப்பெருந்திருவிழா நிறைவு மற்றும் ஆயில்யம் ஆகிய நிகழ்ச்சிகள் ஒரு சேர அமைந்ததால் கோயிலில் இம் மாவட்டம் மட்டுமன்றி திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com