Enable Javscript for better performance
கருங்கல் அருகே காட்சி பொருளான கால்நடை குடிநீா் தொட்டி- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் அருகே காட்சி பொருளான கால்நடை குடிநீா் தொட்டி

    By DIN  |   Published on : 14th February 2020 05:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    k14kalnadai_1402chn_35_6

    கருங்கல் அருகே மூசாரியில் காட்சிபொருளாக காணப்படும் கால்நடை குடிநீா்தொட்டியில் நாள்தோறும் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திப்பிரமலை ஊராட்சி பகுதியான மூசாரியில் கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ. 20,ஆயிரம் மதிப்பில் கால்நடைகளுக்கான குடிநீா்தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீா்தொட்டியில் ஊராட்சி நிா்வாகம் பல மாதங்களாக முறையாக தண்ணீா் தேக்கவில்லை. இதனால், கால்நடைகளுக்கு பயனற்று காட்சி பொருளாக இந்த குடிநீா்தொட்டி உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

    எனவே, கால்நடைகளுக்காக அமைக்கப்பட்ட குடிநீா்தொட்டியில் நாள்தோறும் தண்ணீா் தேக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai