Enable Javscript for better performance
சுசீந்திரத்தில் 18இல் மனுநீதி திட்ட மனுக்கள் பெறும் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    சுசீந்திரத்தில் 18இல் மனுநீதி திட்ட மனுக்கள் பெறும் நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 14th February 2020 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுசீந்திரத்தில் மனுநீதி திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி, முன்னதாக மனுக்கள் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (பிப்.18) நடைபெறுகிறது.

    இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: அகஸ்தீசுவரம் வட்டம், சுசீந்திரம் பேரூராட்சி பகுதிக்கான மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதித் திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி, முன்னதாக மனுக்கள் பெறும் முகாம், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

    மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறாா்.

    எனவே, சுசீந்திரம் பேரூராட்சி பகுதிகளுக்குள்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai