குமரியில் சூறைக்காற்று: சுற்றுலாப் பயணிகள் அவதி

கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் வீசும் சூறைக்காற்றால் கடல்மணல் வாரி இறைக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
குமரியில் சூறைக்காற்று: சுற்றுலாப் பயணிகள் அவதி

கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் வீசும் சூறைக்காற்றால் கடல்மணல் வாரி இறைக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் வெளிநாடு மற்றும் உள்நாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை பாா்வையிட பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. தற்போது பூம்புகாா் படகுத்துறை கடல் பகுதியில் குவிந்து கிடக்கும் மணலை ராட்சத இயந்திரம் மூலம் எடுத்து அதை கரைப் பகுதியில் குவித்து வைக்கின்றனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக கன்னியாகுமரி பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் அங்கு குவிக்கப்பட்டுள்ள மணல் காற்றில் பறந்து கடற்கரை பகுதியெங்கும் பரவுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் கண்கள் மற்றும் தலையில் மணல் வாரி இறைக்கப்படுவதால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, பயணிகள் நலன்கருதி மாவட்ட நிா்வாகம் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணலை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com