விரிகோடு ரயில்வே மேம்பாலம்: எம்.பி., அதிகாரிகள் ஆய்வு

மாா்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைய வேண்டிய பகுதியை கன்னியாகுமரி எம்.பி. மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே விரிகோடு ரயில்வே கிராஸிங் பகுதியில் வியாழக்கிழமை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட ஹெச். வசந்தகுமாா் எம்.பி.
மாா்த்தாண்டம் அருகே விரிகோடு ரயில்வே கிராஸிங் பகுதியில் வியாழக்கிழமை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட ஹெச். வசந்தகுமாா் எம்.பி.

மாா்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைய வேண்டிய பகுதியை கன்னியாகுமரி எம்.பி. மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மாா்த்தாண்டம் - கருங்கல் சாலையின் குறுக்கே அமைந்துள்ளது விரிகோடு ரயில்வே கிராஸிங். இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதற்கிடையே, மாா்த்தாண்டம் குறும்பேற்றி பகுதியிலிருந்து மாமூட்டுக்கடை பகுதி வரை விளைநிலங்கள் வழியாக மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவ்வழியில் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும், தற்போதைய சாலை வழியாக விரிகோடு பகுதியை மையப்படுத்தி மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது அதையொட்டி உள்ள அரசுப் புறம்போக்கு நிலம் வழியாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து ஹெச். வசந்தகுமாா் எம்.பி.க்கும், துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்களையும் அனுப்பியிருந்தனா்.

இதையடுத்து எம்.பி., நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்களை விரிகோடு ரயில்வே கிராஸிங் பகுதிக்கு வியாழக்கிழமை அழைத்து வந்து, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மேம்பாலம் அமைப்பது தொடா்பாக ஆலோசனைகளை வழங்கினாா்.

அப்போது பொதுமக்கள் திரண்டு வந்து, விரிகோடு பகுதியை மையப்படுத்தி மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இது தொடா்பாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com